பெண் மீது கை ஓங்கும் ஆணின் கையை உடைத்து அவரிடமே ஒப்படைப்பேன் - எம்.பி சுப்ரியா சுலே!

பெண் மீது கை ஓங்கும் ஆணின் கையை உடைத்து அவரிடமே ஒப்படைப்பேன் - எம்.பி சுப்ரியா சுலே!

பெண் மீது கை ஓங்கும் ஆணின் கையை உடைத்து அவரிடமே ஒப்படைப்பேன் என மகாராஷ்டிராவின் பாரமதி தொகுதி எம்பி சுப்ரியா சூலே கடுமையாக சாடியுள்ளளார்.

புனேவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஷாகு மகாராஜ், மகாத்மா பூலே, பாபாசாகேப் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் மண் மகாராஷ்டிரா என குறிப்பிட்டார்.

இந்த மாநிலத்தில் பெண்கள் மீது ஆண்கள் தாக்குதல் நடத்தினால் சம்பவ இடத்துக்கு தானே நேரில் விரைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார். புனேவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவினரால் பெண் தொண்டர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.