இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தை நினைத்துக் கொள்கிறேன் - தந்தை ராஜீவ் காந்தி குறித்து ராகுல் உருக்கம்!

இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தை நினைத்துக் கொள்கிறேன் - தந்தை ராஜீவ் காந்தி குறித்து ராகுல் உருக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தனது தந்தையை நினைவுகூர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன் இணையப்பக்கத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்து நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியவர் தனது தந்தை ராஜீவ்காந்தி என கூறியுள்ளார். தனக்கும் பிரியங்காவுக்கும் அற்புதமான தந்தையாக இருந்து மன்னிப்பின் மதிப்பை கற்றுக்கொடுத்த அவர், இரக்கமுள்ள கனிவான மனிதராக இருந்தார் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்ளும் இந்நேரத்தில், தற்போதும் தந்தையை நினைத்து ஏங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.