ஐ.பி.எல்.ஏலத்தை நடத்தியவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு!! ஏலம் மீண்டும் நடக்குமா?

ஐ.பி.எல்.ஏலத்தை நடத்தியவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு!! ஏலம் மீண்டும் நடக்குமா?

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் எப்போதும் கோலாகலமாக நடைபெற்று வரும். அந்த வகையில் தற்போது 15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்க இருக்கிறது.  இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு எப்போதும் வீரர்களை ஏலத்தில் எடுப்பது வழக்கம். அதேபோன்று அடுத்த மாதம் நடைபெறவுள்ள 15-வது ஐ.பி. எல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்றது. அதன்படி இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.  

இந்நிலையில் சரியாக மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த ஐ.பி.எல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஐ.பி.எல் ஏலத்தை நடத்திக்கொண்டிருந்த ஹக் எட்மீட்ஸ் மயங்கி விழுந்ததால் ஏலத்தில் சற்று பரபரப்பு நிலவியது. இதனால் ஐ.பி.எல் ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.