முகக்கவசத்தை எப்படியெல்லாம் அணியக்கூடாது...? பிரபலங்களை வைத்து Funny வீடியோ உள்ளே

முகக்கவசத்தை எவ்வாறு அணிய வேண்டும் என்று திரைப்பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முகக்கவசத்தை எப்படியெல்லாம் அணியக்கூடாது...? பிரபலங்களை வைத்து Funny வீடியோ உள்ளே

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது மாநில அரசு.

இதனால் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அரசு தரப்பிலும், திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வுப் பிரசார வீடியோக்களைத் வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்த அவர், தற்போது திரைப்பிரபலங்களுடன் இணைந்து முகக்கவசம் முறையாக எப்படி அணிய வேண்டும், எப்படியெல்லாம் அணியக்கூடாது என்பதை சித்தரித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நடிகர்கள் கிருஷ்ணா, சதீஷ், யோகிபாபு, சந்தீப் கிஷன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, வித்யூலேகா, வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.