விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கிரண்குமார் தான் குற்றவாளி...! கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கேரளாவில் வரதட்சணை கொடுமை வழக்கில், இளம்பெண்ணின் கணவர்  குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கிரண்குமார் தான் குற்றவாளி...! கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கடந்த ஆண்டு கேரளாவில் விஸ்மயா என்ற ஆயுர்வேத மருத்துவ மாணவி ரப்பர் தோட்டம்,  100 பவுன் நகை, ரொக்கம் என சகல வரதட்சணைகளுடன் திருமணம் செய்து கொடுக்கப்பட்டும், ஒரு வருடத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக குளியலறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இது தொடர்பாக மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கைது செய்யப்பட்ட பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டு 1 வருடமாக நீதிமன்ற காவலில் உள்ளார். கிரண் குமார் ஜாமீன் கோரிய மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. விஸ்மயா உயிரிழந்த வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அதில், போலீசாரின் சாட்சியங்கள், ஆவணங்கங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விஸ்மயா கணவர் கிரண்குமார் தான் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.  மேலும், வரதட்சணை கொடுமை, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமாருக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் தீர்ப்பளித்தார். கிரண் குமாரின் தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.