2 அடி 5 அங்குலம் தான்... உலகின் மிக குள்ளமான இளைஞர் என கின்னஸ் சாதனை..! யார் தெரியுமா?

2 அடி 5 அங்குலம் தான்... உலகின் மிக குள்ளமான இளைஞர் என கின்னஸ் சாதனை..! யார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

நேபாளத்தை சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி என்பவர், உலகின் மிக குள்ளமான இளைஞர் என கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு நேபாளத்தில் பிறந்த இவர், 2 அடி 5 அங்குலம் உயரம் மட்டுமே வளர்ந்துள்ளார். இந்த நிலையில், டோர் பகதூர் உலகின் மிக குள்ளமான இளைஞர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், உலகிலேயே உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவை சேர்ந்த ஜோதி அம்கே தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com