வாயில் 6 டென்னிஸ் பந்துகளை வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நாய்...

கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
 வாயில் 6 டென்னிஸ் பந்துகளை வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நாய்...
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் 2017ம் முதலில் பின்னிபாய்மோலியின் என்பவர் கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வந்தள்ளார். இந்த நாய் வாயில் டென்னிஸ் பந்துகளைத் தொடுவதற்கு ஒரு தனித்துவமான திறமை இருப்பதை கண்டறிந்து  அடிக்கடி கோல்டன் ரெட்ரீவருக்கு ஒரு டென்னிஸ் பந்தை எறிவார். அது அந்த பந்தை பிடித்து மீண்டும் அவரிடமே எறிந்து விளையடும். இதனை தொடர்ச்சியாக ஒரு நாள் இதனை ஏன் சாதனையாக செய்யக்கூடாது என்ற யோசனை தோன்றியது. எனவே கோல்டன் ரெட்ரீவருக்கு தினமும் பயிற்சி அளித்து வாயில் 6  பந்துகளை வைக்க பயிற்சி கொடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு இந்த கின்னஸ் சாதனை படைக்க உதவியுள்ளார். இதற்கான சான்று இப்போது தான் கிடைத்துள்ளதாக பின்னிபாய்மோலி தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் இது குறித்து  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள, பின்னிபாய்மோலி கோல்டன் ரெட்ரீவர் நாய் தனது வாயில் பந்துகளுடனும், கின்னஸ் சாதனை புத்தகத்துடனும் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இது நிச்சயமாக எளிதானது அல்ல. இந்த சாதனை மிகப்பெரியது என்றும் நானே இந்த சாதனையை படைத்தது போல உணர்வதாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சாதனை படைக்க உதவியாக இருந்த என் நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் கின்னஸ் நிறுவனத்துக்கு தனது மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.இதற்கு முன்பு 2003ம் ஆண்டில் ஐந்து பந்துகளை வாயில் வைத்து இருந்ததற்கு கின்னஸில் இடம் பெற்றிருந்தது. இதே போல், ஜப்பானில் பீகில் என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்று சாதனை படைத்தது இருந்தது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com