திறமைகள் எப்போதும் தோற்காது !! அப்படி திறமைக்கு கிடைத்த பரிசை...வாங்க பார்க்கலாம்..

பழைய உலோகத்தைப் பயன்படுத்தி நான்கு சக்கர வாகனம் உருவாக்கிய நபருக்கு கிடைத்த பரிசு

திறமைகள் எப்போதும் தோற்காது !! அப்படி திறமைக்கு கிடைத்த பரிசை...வாங்க பார்க்கலாம்..

மராட்டியாவை  சேர்ந்த தத்தாத்ராய லோகர் என்பவர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக வீட்டில் உள்ள உலோகப்பொருட்களை வைத்து சொந்தமாக ஒரு காரை வடிவமைத்து உள்ளார்.  

தத்தாத்ராய தனது வீட்டில் இருந்த பழைய உலோக பொருள்கள் மற்றும் துணி , கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தி ஒரு குட்டியான  காரை  அவர் தயாரித்துள்ளார். இந்த காரை தயாரிப்பதற்கு அவர் 60,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.  சமீபத்தில் இது குறித்த செய்தி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த செய்தியை சமூக வலைத்தளம் மூலமாக அறிந்த மகேந்திரா கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மகேந்திரா தத்தாத்ராய லோகரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக  நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாராட்டி பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் "இந்த கார்  தெளிவான விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் உருவாக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நம் மக்களின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்' என தெரிவித்து இருந்தார். 

இதனைத்தொடர்ந்து, இன்று மீண்டும் தத்தாத்ராய லோகர் குறித்த ஒரு பதிவை ஆனந்த் மகேந்திரா பதிவிட்டுள்ளார். அதில் " தத்தாத்ராய லோகர் உருவாக்கிய வாகனம் ஓட்டுவதற்கான விதிமுறைகளை மீறுவதால் உள்ளூர் அதிகாரிகள் விரைவில் அந்த வாகனத்தை தடைசெய்வர் . நான் தனிப்பட்ட முறையில் அவருக்குப் பொலேரோ காரை  வழங்குவேன். 'வளம்' என்பது குறைந்த வளங்களைக் கொண்டு அதிகம் செய்வதைக் குறிக்கும் என்பதால், அவரது உருவாக்கம் நம்மை ஊக்குவிக்கும் " என தெரிவித்துள்ளார்.

மேலும், பழைய உலோகத்தைப் பயன்படுத்தி நான்கு சக்கர வாகனம் உருவாக்கிய நபரின் திறமையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.