அதிர்ஷ்டம்னா இப்படிதான் இருக்கனும்..! தூய்மை பணியாளர்கள் வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு..!

அதிர்ஷ்டம்னா இப்படிதான் இருக்கனும்..!  தூய்மை பணியாளர்கள் வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு..!

கேரளாவில் தூய்மை பணியாளர்கள் 11 பேர் இணைந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசாக கிடைத்துள்ளது. 

மலப்புரம் மாவட்டத்தில் பரப்பனங்காடி பகுதியை சேர்ந்த பிந்து, லீலா, லட்சுமி, சந்திரிகா உள்ளிட்ட 11 பேர் தூய்மை பணியாளர்களாக உள்ளனர். 

கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 10 பேர் சேர்ந்து 1 லாட்டரி சீட்டை வாங்க எண்ணிய போது பணம் குறைவாக இருந்ததால் 11-வது நபராக மற்றொரு பணியாளரையும் சேர்த்து 250 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். 

இந்நிலையில் தாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்ததை அறிந்த 11 பேரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

தாங்கள் பரிசாக பெற்ற பணத்தை சமமாக பங்கீட்டு கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதையும் படிக்க     | கொரோனா நிவாரணத்தொகை பெற்ற போது 'பொக்கைவாய் சிரிப்பால்' பிரபலமான வேலம்மாள் பாட்டி காலமானார்..!