பி.டி உஷா போல் ஓடும் குரங்கு...

இரு கால்களில் பறக்கும் குரங்கு ஒன்று ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

பி.டி உஷா போல் ஓடும் குரங்கு...

சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பல வைரலாகி வருவது வழக்கமான ஒன்றாகும்.அப்படிப்பட்ட வகையில் தற்போது ஒரு குரங்கின் வீடியோ சுவாரசியத்தை ஏற்படுத்தும்  வகையில் பரவி வருகிறது.கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழியை உண்மையாக்கும் வகையில் இந்த குரங்கு முழுவெகத்தில் ஓடும் காட்சிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த குரங்கானது இரண்டு கால்களை மட்டுமே பயன்படுத்தி ஓடுகிறது.இதனை பார்ப்பதற்கு மனிதனை போலவே உள்ளதாக தெரிவிக்கின்றனர்.மலைப்பாதையில் தடுப்பு சுவரில் வேகமாக ஓடும் குரங்கு பி. டி உஷாவை போல ஓடுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த குரங்கானது ஒரு அடி தவறினால் கூட மலையில் இருந்து நேராக பள்ளத்தில் விழுந்திருக்கும் எனவும் அந்த வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியுற செய்கிறது.இந்த வீடியோவை சமூக  வலைதலங்களில் மக்கள் வேடிக்கையாக பார்த்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து மக்கள் பலர் குரங்கு பள்ளத்தில் விழுந்திருக்காது எனவும் அது விழுந்திருந்தால் மரத்தில் தாவி உயிர்பிழைத்திருக்கும் என கருத்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.