என்னது சும்மா போட்டிங்களா..! அப்போ..கோகோ கோலா, மெக்டொனால்ட்சைன்னு சொன்னதெல்லாம்...

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலா, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்களை வாங்க போவதாக ட்விட்டரில் அதிரடி காட்டி வரும் எலன் மஸ்க் கேலிக்காகவே இப்பதிவுகளை இட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

என்னது சும்மா போட்டிங்களா..! அப்போ..கோகோ கோலா, மெக்டொனால்ட்சைன்னு சொன்னதெல்லாம்...

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்பு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது அவருடைய ட்வீட்-களில் இருந்து பார்க்க முடிகிறது.

ட்விட்டரை கைப்பற்றிய பின்பு பல முன்னணி பிராண்டுகளை நேரடியாக வம்புக்கு இழுத்து வருகிறார் எலான் மஸ்க். கோகோ கோலா, ரெட் புல், மெக்டொனால்ட் ஆகிய நிறுவனங்களை தான் வாங்க போவதாக ட்விட்டரில் பகிரங்கமாக பதிவுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளாக மாறி வர தற்போது மேலும் ஒரு அதிரடி காட்டியுள்ளார் எலன் மஸ்க். அதாவது இந்த பதிவுகளை எல்லாம் தாம் கேலிக்காகவே பதிவிட்டதாகவும், தம்மால்  ஆச்சரியத்தை நிகழ்த்த முடியாது எனவும் பதிவிட்டுள்ளார்.