90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த WWE வீரர் தி கிரேட் காளி பாஜகவில் இணைந்தார்!! திடீர் முடிவுக்கான காரணம்?

90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த WWE வீரர் தி கிரேட் காளி பாஜகவில் இணைந்தார்!! திடீர் முடிவுக்கான காரணம்?

பிரபல மல்யுத்த வீரர் ’கிரேட் காளி’ பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

WWE அரங்கில் முன்னணி வீரராகத் திகழ்ந்த ‘தி கிரேட் காளி’, 90’ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற இந்திய மல்யுத்த வீரர் ஆவார். தலிப் சிங் ராணா என்ற இயற்பெயர் கொண்ட காளி, இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிற்காக பிரதமர் மோடியின் பணி, அவரை சிறந்த பிரதமராக்கி உள்ளதாக நினைப்பதாகவும், தேசத்தின் வளர்ச்சிக்காக அவரது ஆட்சியில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் தேசியக் கொள்கையின் தாக்கத்தால் அக்கட்சியில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.