பிரேக்குக்கு பதில் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் விபரீதம் - கடைக்குள் புகுந்து 2 பேர் மீது மோதிய கார்!

திடீரென கடைக்குள் புகுந்த கார் ..!

பிரேக்குக்கு பதில் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் விபரீதம் - கடைக்குள் புகுந்து 2 பேர் மீது மோதிய கார்!

அமெரிக்காவில் பிரேக்குக்கு பதில் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் கடை ஒன்றில் கார் வேகமாக புகுந்த காட்சி வெளியாகியுள்ளன.

டெம்பே பகுதியில் உள்ள கடை ஒன்றில் இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கடைக்குள் திடீரென கார் ஒன்று புகுந்த நிலையில், இருவரும் காரால் தள்ளிச் செல்லப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.