
சரவெடி சரண் என்ற 26 வயது கானாபாடகர் ஒருவர் பாடிய பாடலின் வீடியோ தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அந்த வீடியோவில் அவர், " பால்வாடி படிக்கும் போதே பூந்தி வாங்கி கொடுத்து.. எட்டாவது படிக்கும்போதே சிறுமியை வாந்தி எடுக்க வைப்போம். அப்போது தான் என்ன விட்டு போகாது." என்று பெண்கள் குறித்து இழிவாக பாடி இருந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. அத்துடன் இது குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகவும் பார்க்கப்படுகிறது. மிகவும் வக்கிரமான மனநிலையில் பாடப்பட்ட இந்தப்பாடல் தற்போதைய நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், கானா பாடகர் சரவெடி சரண் பாடும் பாடலை ரீட்வீட் செய்து, இது போன்றவர்கள் மீது போக்சோ சட்டம் பாய வேண்டும் என தெரிவித்துள்ளார். இவரைப் போன்று பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கானா பாடகர் சரவெடி சரணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.