ஆக்ரோஷமாக வந்த காட்டு யானையிடம் சிக்கிய இளைஞர்கள்.. தப்பித்தார்களா?

கிருஷ்ணகிரியில் கிராமத்தின் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பித்த இளைஞர்கள்.

ஆக்ரோஷமாக வந்த காட்டு யானையிடம் சிக்கிய இளைஞர்கள்.. தப்பித்தார்களா?

கிராமத்தின் பக்கம் சுற்றி திரியும் காட்டு யானை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கும்பார்கோட்டை கிராமத்தை ஒட்டி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானை ஒன்று கிராமத்தின் பக்கம் சுற்றி திரிந்து வந்துள்ளது. காட்டு யானை உலா வருவதால் பொதுமக்கள் பெரிதாக வனப்பகுதி பக்கம் செல்வதில்லை..

காட்டு யானையிடம் சிக்கிய இளைஞர்கள்:

இந்நிலையில், இன்று கிராமத்தின் அருகே வேலை பார்த்து வந்த இளைஞர்கள் சிலர் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் வனப்பகுதியை சுற்றி பாக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த காட்டு யானை ஆக்ரோஷமாக இருந்ததை கண்ட அந்த இளைஞர்கள் பதறி போகி அங்கிருந்த தப்பிக்க முயன்றுள்ளனர்.

இளைஞர்கள் தப்பித்தது எப்படி?

பத்தற்றதில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போன இளைஞர்கள்.. டக்குனு அங்குள்ள பாறைகள் மேல் ஏறி தப்பிக்க முயன்றனர். ஒரு சிலர் வேகமாக ஏறி மேல் சென்றனர்.. சிலர் பாறை மேல் ஏற திணற, அருகே இருந்தவர்கள் உதவியுடன் அவர்களும் மேல் ஏறி தப்பித்தனர். நூலிழையில் கட்டு யானையிடம் தப்பித்த இளைஞர்கள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.