இளைஞரை தூக்கி சென்ற பட்டம்!!
பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்த நபர் ஒருவரை பட்டம் திடீரென தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் மாவட்டத்தின் புலோலி என்ற பகுதியில் சிலர் பட்டம் விட்டு விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.அதில் இளைஞர்கள் ஒரு பெரிய அளவிலான பட்டத்தை விட்டுள்ளனர்.
இளைஞர்கள் விட்ட பட்டம் பறந்து கொண்டிருந்த நிலையில் மற்றொரு பட்டத்தை அதில் ஏற்ற முற்பட்டதாக சொல்லப்படுகிறது.அவ்வப்போது இரண்டவதாக ஏற்றப்பட்ட பட்டத்தின் முச்சை கயிற்றை பிடித்திருந்த நபரையும் பட்டம் சேர்த்து இழுத்துக் கொண்டு பறந்துள்ளது.
அந்த நபரை சுமார் 3ஒ அடி தூர உயரம் வரை தூக்கி கொண்டு பறந்துள்ளது.அந்த பட்டத்தை இளைஞர்கள் கீழிறக்க முடியாமல் திணறியுள்ளனர்.சுமார் ஐந்து நிமிடங்கள் அந்நபர் பட்டத்தொடு பறந்ததாகவும் அவரின் உடல் எடையை மேலும் மேலும் பட்டத்தால் தூக்கி செல்ல இயலாததால் அந்நபர் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கயை விட கீழே விழுந்துள்ளார்.