தாயின் இரண்டாவது திருமணத்தை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வரும் மகள்! 

விவாகரத்து பெற்ற தாயின் இரண்டாவது திருமணத்தை பெருமையாக கொண்டாடிய மகளை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தாயின் இரண்டாவது திருமணத்தை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வரும் மகள்! 

சமூக வலைதளங்களில் திருமண புகைபடங்களை பதிவேற்றுவது வழக்கம். பெற்றோரின் திருமணத்தை நேரில் நம்மால் பார்த்திருக்க முடியாது,ஆனால் இங்கு ஒரு பெண் தனது தாய்க்கு இரண்டாவது திருமணததை நடத்தி வைத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

அந்த பெண்ணின் தாய்க்கும் தந்தைக்கும் 15 வருடங்களுக்கு முன்னதாகவே விவாகரத்து நடந்து விட்டதாக தெரிவித்த இந்த விவாகரத்து நடந்தது ஒரு விதத்தில் நல்லது தான் என கூறியுள்ளார்.ஏனெனில் அவர் இருந்தது ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப் எனவும், அந்த உறவில் தனது தாய் அதிகப்படியான துன்பத்தினை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இதனை பற்றிய அந்த பெண் தனக்கு 16 வயது சகோதரன் இருப்பதாகவும், அவனும் நானும் தந்தை வேண்டும் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஆனால் தற்போது தந்தை உருவத்தில் ஒருவரை வரவேற்க தயாராகி உள்ளதாக கூறிகின்றார்.

திருமணத்திற்காக தனது தாய் மெஹந்து இடும் புகைபடத்தையும் அதனுடன் அவர் மகிழ்ச்சியாக நடனமாடிய தருணத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவிட்டு நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அப்பெண் தெரிவித்தார்.

பொதுவாகவே தாய்க்கோ தந்தைக்கோ மறுமணம் செய்து வைக்க தயங்கும் சந்ததியினருக்கு இடையில் இந்த பெண் தனது தாய்க்கு இரண்டாவது திருமணத்தை முடித்து வைத்தது குறித்து பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதிலிருந்து பெற்றோர்களுக்கு குழந்தைகள் ஆதரவாக இருத்தல் வேண்டும் என்பதை நினைவுக்கு கொண்டுவந்துள்ளது.