பால் கொடுக்க வந்த தாய் நாயை விரட்டி, குட்டிகளைக் காத்த பாம்பு...

பால் கொடுக்க வந்த தாய்நாயை குட்டிகளிடம் நெருங்க விடாமல், குட்டி நாய்களுக்கு முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது.

பால் கொடுக்க வந்த தாய் நாயை விரட்டி, குட்டிகளைக் காத்த பாம்பு...

கடலூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்க்கரை, இவர் வளர்த்த நாய் தற்போது மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் நேற்று தான் ஈன்ற குட்டிகளுக்கு பால் கொடுக்க தாய்நாய் வந்த போது நல்ல பாம்பு ஒன்று நாய் பால் கொடுக்க விடாமல் படம் எடுத்தது.

தாய் பாசத்தில் குரைத்த நாயின் சத்தம் கேட்டு வந்து பார்த்த வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அவர் வரும் வரையிலும் நல்ல பாம்பு குட்டி நாய்களை தீண்டாமல் இருந்ததை செல்லா வீடியோ எடுத்தார்.

தொடர்ந்து குட்டிகள் முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை லாபகரமாக மீட்டார். குட்டி நாய்களை காத்த நல்ல பாம்பு என இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | நான் பாக்காத பாம்பா? பாம்ப பொம்மையா வச்சு விளையாடின பரம்பரை டா நாங்க...!!!