ட்ரெண்டாகி வரும் கொரோனா ஜிமிக்கி கம்மல்..!!

ட்ரெண்டாகி வரும் கொரோனா ஜிமிக்கி கம்மல்..!!

கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது

அதேநேரத்தில், ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்து விற்பனை செய்து வணிகர்களின் வியாபார யுக்தியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் வடிவிலான தோசை, முகக்கவசம், புரோட்டா போன்றவைகளை கண்டுபிடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் வடிவில் தங்க ஜிமிக்கி தோடு விற்பனைக்கு வந்துள்ளது பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.