கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்திக்கு சுவாச குழாயில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டுபிடிப்பு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சுவாச குழாயில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்திக்கு சுவாச குழாயில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டுபிடிப்பு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து கொரோனா பாதிப்பு தொடர்பான பிரச்சனைகளில் அவதியுற்று வந்த அவர், டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சுவாச குழாயில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.