சூப்பர்மேன் போல் வேடமிட்ட நடிகர்: பில்டப் கொடுத்து காயமடைந்த பரிதாபம்

சூப்பர்மேன் போல் வேடமிட்ட நடிகர்:  பில்டப் கொடுத்து காயமடைந்த பரிதாபம்

பிரேசிலில் சூப்பர்மேன் போல் உடை அணிந்து வாகனத்தை நிறுத்த முயன்றவர் மீது பேருந்து மோதும் காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேசிலை சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஒருவர், அண்மையில் சூப்பர்மேன் போல் தன்னை அலங்கரித்தபடி, ஸ்டண்ட் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பேருந்து செல்லும் சாலையில் நின்ற அவர், பேருந்து நெருங்கி வந்ததும் மேலே பறப்பது போன்ற காட்சியை உருவாக்க முயன்றார். ஆனால் பேருந்து தனது அருகே வரும் நேரத்தை கணக்கிட தவறிய அவர், பேருந்து மோதி லேசான காயத்துடன் கீழே விழுந்தார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.