சினிமா எப்போதும் சுதந்திரத்தின் பக்கம் தான் நின்றிருக்கிறது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

சினிமா எப்போதும் சுதந்திரத்தின் பக்கம் தான் நின்றிருக்கிறது - உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி!

சினிமா எப்போதும் சுதந்திரத்தின் பக்கம் தான் நின்றிருக்கிறது என கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சினிமா ஊமை இல்லை என்பதை நிரூபிக்க மற்றொரு சாப்ளின் தேவை என வலியுறுத்தினார். சார்லி சாப்ளினின் "தி கிரேட் டிக்டேட்டர்" படத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், விரைவில் சர்வாதிகாரிகள் கொல்லப்பட்டு அவர்கள் பெற்ற அதிகாரங்கள் மீண்டும் மக்களுக்கே திரும்பும் எனக் கூறினார்.

உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கும் வேளையில் திரைப்பட இயக்குநர்கள் அமைதியாக இருக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.