அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு... இணையத்தை கலக்கும் சிறுவர்கள்!!

அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு... இணையத்தை கலக்கும் சிறுவர்கள்!!

கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாடல் காட்சிகளை, சிறுவர்கள் சிலர், மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ள வீடியோ, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் விஜய், பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "கில்லி". 2004 ல் வந்த திரைப்படமாக இருந்தாலும், இப்பொழுது ரீல்ஸில் கலக்கி வரும் 2K கிட்ஸால், அப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மறு உருவாக்கம் பெற்று அவ்வப்போது வைரல் ஆகிறது.

அந்த வரிசையில், இப்பொழுது இணையத்தை கலக்கி வரும் சிறுவர்களின், அர்ஜுனரு வில்லு பாடல் காட்சிகள், வைரலானது மட்டுமல்லாமல், காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில், மொத்தம் 6 சிறுவர்கள் நடித்துள்ளார்கள். அதிலும், அடியாளாக நடித்துள்ள, சிகப்பு கால்ச்சட்டை அணிந்துள்ள LKG சிறுவன், தனியிடத்தை பிடித்துள்ளான். இந்த வீடியோ, விஜய்யாக நடித்துள்ள சிறுவன், தனலட்சுமியாக நடித்துள்ள குழந்தையின் கழுத்தில், அட்டைக்கத்தியை வைத்து மிரட்டுவதில் ஆரம்பித்து, சேஸிங்கில் தப்பித்து ஓடுவதில் முடிகின்றது.

இதனிடையே, அணிவகுத்து நிற்கின்ற சைக்கிள்களில் காற்றை பிடிங்கிவிடுவது, முத்துபாண்டியின் கழுத்தில் துணியை கட்டி இழுத்துச் சென்று தள்ளி விடுவது, பஞ்சர் ஆன சைக்கிளின் முன் சக்கரத்தை கையால் தூக்கி பஞ்சர் போடுவது, விரட்டி வரும் முத்துபாண்டியிடம் இருந்து தப்பித்து வாழைத்தோப்பில் பதுங்குவது, அங்கு வந்த முத்துபாண்டியின் அடியாட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வீடியோக்கள் 1000 வந்திருந்தாலும், இந்த வீடியோ வைரல் ஆனதற்கு ஒரு காரணம் சிறுவர்களின் மனத்தைக் கவரும் நடிப்பும், அனைவரின் மனதில் இடம் பிடித்திருக்கும் அர்ஜுனரு வில்லு பாடலும் தான். இந்த வீடியோவில் நடித்துள்ள சிறுவர்கள் அனைவரும் பத்து வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் இந்த வீடியோ வைரல் ஆனதற்கு மற்றொரு காரணமாக அமைகிறது. தற்பொழுது இந்த வீடியோவை அனைவரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க || குடும்பத் தலைவிகளின் விவரங்கள் 6-ம் தேதி முதல் சரிபார்ப்பு!!