ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்த சிறுவன் வீடியோ வைரல்!!!

சாலையில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தேசிய கொடி கொடுத்து சல்யூட் அடித்த சிறுவனின் வீடியோ, தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்த சிறுவன் வீடியோ வைரல்!!!

குழந்தைகள் எப்பொழுதும் குறும்புத் தனமானர்கள், சேட்டை அதிகம் என்றெல்லாம் தான் அனைவரும் கூறுவோம். ஆனால், இன்றைய குழந்தைகளோ, பல வகையான சுட்டித் தனங்களை வெளிப்படுத்தினாலும், பல பிரமிக்க வைக்கும் செயல்களையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஒரு சிறுவன், செய்த காரியம், 76வது சுதந்திர தினத்தை ஒட்டி, பலராலும் பகிரப்பட்டு, இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

பெங்களுருவிமான நிலையத்தில் இருந்து, என்ற தலைப்பில் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஒரு சிறுவன், கையில் மூவர்ண கொடியேந்தி, அருகில் காவலுக்கு நின்று கொண்டிருந்த ராணுவ வீரர்கல் அருகில் செல்கிறார். பின், அவர்களிடம் கொடியை கொடுத்து, பின், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் சல்யூட் செய்து புன்னகைக்கிறார். இதனை அந்த ராணுவ வீரர்கள் ரசிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ, இணைய வாசிகளால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த சிறுவனின் பெயர், ரிஷி கார்த்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கர்ணன் மற்றும் சுமித்ராவின் மகனான இவர், தென்காசி சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தகவல்கள் கூறிகின்றன.

இந்த அழகான வீடியோவைக் கண்டு மகிழுங்கள்.