உஷாராய்யா உஷாரு... பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக்....

உஷாராய்யா உஷாரு... பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக்....

கொரோனா தொற்று அதிகரிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில்,  நாட்டு மக்கள் அனைவரும் வேளைகளை இழந்து பொருளாதார ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.


இந்த நிலையை சமாளிக்க பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு நிவாரண நிதியுதவி என பல செயல்களை செய்துவருகிறது.
இதுபோன்ற இக்கட்டான நிலையில் மோசடி கும்பல்களின் செயல்களும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. நமது மொபல் நம்பருக்கு திடீரென ஒரு மெசேஜ் வரும் அதில் நீங்கள் 1,0000 ரூபாய் வென்றுவிட்டீர்கள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என மோசடி கும்பல் மெசேஜ் முலம் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.


ஆனால் இந்த மெசேஜ் முலமும் பலர் தங்களது பணத்தை பரிகொடுத்த அவலமும் நேர்ந்துள்ளது. பலவிதமாக மக்களை மோசடி செய்யது ஏமாற்றும் கும்பல்கள் மத்தியில் தற்போது புதுவிதாமன மோசடி செய்வதற்கு யோசித்துள்ளனர் மோசடி கும்பல்.

பேடிஎம் பெயரில் பொய்யான மெசேஜ் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மெசேஜில் பேடிஎம் வெப்சைட்டை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு கேஷ் பேக் சலுகை என்ற செய்தி வருகிறது. அதன் கீழே send gift to paytm என்று குறிப்பிட்டுள்ளது. அதை கிளிக் செய்தால் மற்றொரு போலியான வெப்சைட்டுக்குச் செல்கிறது.

இதுபோன்ற போலியான மெசேஜ்களில் வாடிக்கையாளர்கள் முன எச்சரிக்கையாக இருக்க அறுவுறுத்தப்படுள்ளது. பேடிஎம்களில் இதுபோன்ற கேஷ் பேக் சலுகைகள் உண்மையிலேயே வழங்கப்படும் ஆனால் அது பேடிஎம் ஆப்களில் மட்டுமே. என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.