கஞ்சா போதையில் இளைஞர் ரகளை: சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுப்பட்ட  இளைஞரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா போதையில் இளைஞர் ரகளை: சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...

திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களை விரட்டி அடித்து ரகளையில் ஈடுப்பட்டார். அப்போது அங்கு கொய்யா வியாபாரம் செய்த மூதாட்டியை தகாத வார்த்தைகளால் பேசியும், கையில் கட்டையை வைத்துக் கொண்டு பொருட்களை சூறையாடியும் ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு போலீசார் இருந்த போதும், அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து போதை ஆசாமியை பொதுமக்களே சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.பேருந்து நிலையத்திற்கு வந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.