மருந்தக கடையின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை- மர்மநபருக்கு வலைவீச்சு...

புதுச்சேரி- தமிழக எல்லையில் உள்ள மருந்தக கடையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மருந்தக கடையின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை- மர்மநபருக்கு வலைவீச்சு...

புதுச்சேரி கோரிமேடு எல்லையில் உள்ள தமிழக பகுதியான பட்டனூரில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் மருந்தகம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மர்மநபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே சென்று கல்லா பெட்டியில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த மேலாளர் கடையின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்ற பார்த்தபோது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து கடையின் மேலாளர் ஜெயபிரகாஷ்  அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அதில் மர்மநபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை அள்ளி சென்ற் காட்சி பதிவாகி இருந்தது.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஜெயபிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.