தேசியக்கொடிக்கு பதிலாக தகரவாலியை ஏற்றி தொங்கவிட்ட சமூகவிரோதிகள்....புகைப்படம் வைரல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருக அரசுபள்ளி கொடிகம்பத்தில் சமூக விரோதிகள் சிலர் தேசியகொடிக்கு பதிலாக தகரவாலியை ஏற்றி தொங்கவிட்டுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

தேசியக்கொடிக்கு பதிலாக தகரவாலியை ஏற்றி தொங்கவிட்ட சமூகவிரோதிகள்....புகைப்படம் வைரல்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த உள்ள கோடங்கி பாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது . கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, இதனால் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  இந்த பள்ளி வளாகத்தில் உள்ள தேசிய கொடி ஏற்ற கூடிய கொடி கம்பத்தில் சமூக விரோதிகள் சிலர், தகரவாலியைக் தொங்கவிட்டு விட்டு பள்ளி வளாகத்தில் உள்ள கல்வெட்டு பள்ளி சுவர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள பூட்டு ஆகியவற்றில் சகதியை வீசிச் சென்றுள்ளனர் .

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, உள்ளிட்ட இடங்களை சேதம் செய்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பள்ளிக்கு இரவுநேர காவலர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதாகவும், இந்த பள்ளி வளாக பகுதியில் ஒரு புதிய கட்டிடம் கட்ட மதில் சுவர் உடைக்கப்பட்டு வழி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வழியாக தான் சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து இதுபோன்ற சமூக வீரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.