வங்கி கடனை கட்ட முடியாததால் 17 வருடங்களாக காட்டுக்குள் காருடன் வாழும் முதியவர்...

முதியவர் ஒருவர் வங்கி கடனை கட்ட முடியாததால் 17 வருடங்களாக காட்டுக்குள் காரோடு வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கடனை கட்ட முடியாததால் 17 வருடங்களாக காட்டுக்குள் காருடன் வாழும் முதியவர்...

தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள நெக்கரே கிராமத்தில் கடந்த 2000ம் ஆண்டு 1.5 ஏக்கர் நிலங்கள் உடன் சந்திரசேகர் என்பவர் வசதியாக வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய காரை தவிர அனைத்தையும் ஜப்தி செய்தனர்.

வங்கி நடைவடிக்கைகளால் வீட்டை விட்டு வெளியேறிய சந்திரசேகர், தனது தங்கை வீட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தார். அங்கும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் சண்டை ஏற்பட்ட காரணத்தால் அவர் தன்னுடைய காருடன் அடர்ந்த வனத்திற்கு பயணம் மேற்கொண்டார்.கடந்த 17 ஆண்டுகளாக காட்டுக்குள்ளே வாழ்ந்து வரும் அந்த முதியவர் சந்திரசேகர் வங்கியிடமிருந்து தன்னுடைய சொத்துக்களை மீட்பதே தன்னுடைய லட்சியம் என்று கூறுகிறார்.