கார் முழுவதும் அமிதாப் டையலாக் - நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!

கார் முழுவதும் அமிதாப் டையலாக் - நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!

கார் முழுவதும் அமிதாப்பச்சனின் டையலாக்கை எழுதி, அதனை அவரிடம் காட்டி ஆட்டோகிராஃப் பெற்ற ரசிகரின் செயலுக்கு ஆச்சரியம் தெரிவித்துள்ளார் ஆனந்த் மகிந்திரா.

மஹிந்திரா நிறுவனம் லேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய தார் கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் காரை அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர் ஒருவர் அண்மையில் வாங்கியுள்ளார்.

பின்னர், காரின் கதவு, முன்புறம், பின்புறம் என அனைத்து இடங்களிலும் அமிதாப்பச்சன் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற டையலாக்குகளை ஸ்டிகர்களாக ஒட்டியுள்ளார். மேலும், காரின் கதவைத் திறந்தால், அமிதாப்பச்சனின் டையலாக் ஒலிக்கும் வகையில் சவுண்ட் சிஸ்டம் ரெடி செய்யப்பட்டுள்ளது.

இந்த காரை அமிதாப்பச்சனிடன் கொண்டு சென்று காண்பித்து வாழ்த்து பெற்ற அவர், காரின் டேஸ்போர்டில் அமிதாப்பச்சன் ஆட்டோகிராஃப்  இட்ட பிறகே வண்டியை ஓட்டியுள்ளார். இதனை அமிதாப் பச்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட அதை பார்த்த ஆனந்த் மகிந்திரா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.