எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா? முன்னாள் ராணுவ வீரரை அடித்த பெண்ணின் வைரல் வீடியோ!

முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் கட்டையால் அடிக்கும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதனால், பெண்கள் செய்யும் கொடூரங்களை எதிர்த்து நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா? முன்னாள் ராணுவ வீரரை அடித்த பெண்ணின் வைரல் வீடியோ!

நாய்களை அடித்தக் காரணத்தால், பாதுகவலர் ஒருவரை, லத்தியால் ஒரு பெண் ஆசிரியர் அடித்தார். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏன் என்றால், அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த வீடியோ வைரலானது சுதந்திர தினத்தன்று என்பதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அந்த வீடியோவில், ஆபாச வார்த்தைகளால், அந்த முன்னாள் ராணுவ வீரரைத் திட்டி, “நாய்களை அடிப்பாயா?” என திரும்ப திரும்ப கேள்வி கேட்பது தெரிகிறது. மேலும், இந்த பெண் அவரை அடித்து விட்டு, அவரையே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல கூறியிருக்கிறார். இந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவை 'Gender Inequal INDIA' என்ற ட்விட்டர் பக்கம், பகிர்ந்து, அதில், “ஆண்களுக்கு இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை” என்று பதிவிட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக த்ரெட்டில், பல வீடியோக்கள் இது போன்ற, பெண்கள் ஆண்களை அடிக்கும் வீடியோக்களைப் பகிர்ந்து, ஆண்களுக்கு நீதி வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலான நிலையில், பலரும் அந்த ஆசிரியை மீது வெறுப்பு கருத்துகள் பகிர்ந்து, நெட்டிசன்கள் கொண்ட்தளித்து வருகின்றனர்.

இந்த வீடியோ குறித்து ஆக்ரா காவல் துறையினரும், தங்களது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி விகாஸ் குமார் கூறினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.