கல்வி கற்க வயது ஒரு தடையல்ல!! - நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 61 வயதான நபர்!!

அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப்பட்டியலில் 249 வது இடம் பிடித்துள்ளார்.

கல்வி கற்க வயது ஒரு தடையல்ல!! - நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 61 வயதான நபர்!!

இவரது பெயர் சிவப்பிரகாசம் வயது 61. தர்மபுரியை சேர்ந்த இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிவப்பிரகாசம் நீட் தேர்வில் வெற்றி பெற்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கவுன்சிலிங்கிற்காக வந்துள்ளார்.

சிவப்பிரகாசம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இடஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில் 249 வது இடம் பிடித்துள்ளார். இதனை பற்றி கூறிய அவர் தனக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே ஆசை. வயது உச்சவரம்பு காரணமாக தற்போது நீட் தேர்வு எழுதினேன் வெற்றியும் பெற்றேன் என்கிறார்.  

நீண்ட நாட்களாக மருத்துவ சேவை செய்ய முடியவில்லை என எனது வாய்ப்பை வேறொரு நபருக்கு கொடுப்பது குறித்து யோசித்து வருவதாகவும் கூறினார். ஓய்வு பெற்ற ஆசிரியரான சிவப்பிரகாசத்தின் மாணவர் ஒருவர் 5 வது இடத்தை பெற்றுள்ளதால் அதே கவுன்சிலிங் கலந்தாய்வில் அவரும் பங்கேற்க்க இருக்கிர்றார் என்பது குறிப்பிடத்தக்கது.