நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட இளம் பெண்..! சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட போது நிகழ்ந்த வெறிச்செயல்..!

400 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்த பாகிஸ்தான் போலிஸ்..!

நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட இளம் பெண்..! சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட போது நிகழ்ந்த வெறிச்செயல்..!

நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு இளம் பெண் பந்தாடப்படும் காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்தப் பெண்ணை மேலே தூக்கிப் போட்டு விளையாடும் காட்சியும், அவரது ஆடையை கிழித்தெடுத்த காட்சியும் காண்போரை பத பதைக்க வைக்கிறது. இந்த சம்பவம் அரங்கேறியது நமது அண்டை நாடான பாகிஸ்தானில். 

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் உள்ள ஆசாதி சவுக் என்ற பகுதியில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி கடந்த 14-ம் தேதி சுந்தந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். அதனை தனது யூடியூப் சேனலில் ஒளிப்பரப்புவதற்காக சூட் செய்ய சென்றிருக்கிறார். அப்போது அந்த இளம் பெண்ணை சூழ்ந்த நூற்றுகணக்கான ஆண்கள், அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக துண்புற்த்தத் தொடங்கியுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணை தூக்கி போட்டு விளையாடியதுடன், அவரது ஆடையை கிழித்து மானப்பங்க படுத்தியுள்ளனர். 

அவருடன் கூட வந்த குழுவினரை விரட்டியடித்த அந்த காட்டுமிராண்டிக் கூட்டம், அப்பெண்ணை சின்னாபின்னமாக்கிய நிலையில், பலத்த காயங்களுடன், ஆடைகள் கிழிந்து தொங்கிய நிலையில், கூட்டத்தில் இருந்து தப்பி சென்ற அப்பெண், இச்சம்பவம் குறித்து தனது வேதனையை காவல் நிலையத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இளைஞர்கள் என்னை கிண்டல் செய்ததுடன், ஒன்று கூடி பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியதாகவும், அருகில் இருந்த பூங்காவிற்குள் ஓடிய என் ஆடைகளை கிழித்து, மேலே தூக்கிப் போட்டு விளையாடி, என்னிடம் இருந்த செல்போன், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் கூறியிருந்தார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். பாகிஸ்தான் நாட்டு அதிபர் இம்ரான்கான் வரை சென்ற இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி அவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் படி, இளம் பெண்ணை துன்புறுத்திய 400-பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். சுதந்திர தினத்தன்றே ஒரு இளம் பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை என்பது இந்த வீடியோ மூலம் நிரூபணமாகியுள்ளது. இது போன்ற காட்டுமிராண்டி ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.