ஒரு நிமிடத்தில் 66 முறை டிம்பாசனம் செய்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவி!

கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி மாணவி ஒருவர், ஒரு நிமிடத்தில், 66 முறை டிம்பாசனம்  செய்து உலக சாதனை படைத்துள்ளார். 

ஒரு நிமிடத்தில் 66 முறை டிம்பாசனம் செய்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவி!

பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த எழிலன்-சுதா தம்பதியரின் 10 வயது மகள் தரங்கிணி.  தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் இவர், சிறுவயது முதலே யோகாசனம் கற்று வருகிறார். யோகாசனத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

அந்த வகையில், உடலை பின்புறமாக, கீழ்நோக்கி வளைத்து தலையால் கால்களைத் தொடக்கூடிய டிம்பாசனம் என்ற  ஆசனத்தை ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இவரது சாதனை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ஆவம்சம் உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.