மனிதன் போல பல் அமைப்பில் விசித்தரமான நண்டு; வைரலாகும் போட்டோ!

மனிதர்களைப் போல பற்கள் அமைந்துள்ள நண்டின் போட்டோ, இணையத்தில் வைரலாகி வர, இணையவாசிகள், கலவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மனிதன் போல பல் அமைப்பில் விசித்தரமான நண்டு; வைரலாகும் போட்டோ!

இந்த உலகம் மிகவும் பெரிது. நம் கண்ணுக்கு எட்டியது சிலவாக இருக்க, நாம் காணாதது உலகளவு என்பதில் எந்த ஐயமும் இல்லை. பல விசித்திரமான வித்தியாசமான ஜீவராசிகளை அவ்வப்போது ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கண்டுபிடித்து இணையத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பெரும் ஆராய்ச்சியாளர்களுக்கே ஆச்சிரியமூட்டும் உயிரினங்கள் இந்த பூமியில் காணப்பட்டு வர, மேலும் ஒரு அதிர்ச்சிகரமான உயிரினத்தின் போட்டோ சோசியல் மீடியாக்களில் வெளியாகி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பல வகையான நண்டுகளில், ஒரு வகை மனித பற்கள் அமைப்புப் போலவே கொண்டுள்ளது. அதன் போட்டோ சோசியல் மீடியாக்களில் வெளியான நிலையில், இது சுவாரஸ்யமாக இருப்பதாக ஒரு சிலர் கூறி வந்தாலும், பலர் பயமுறுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறிவருகின்றனர்.

அதிசயங்கள் நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளது. அந்த விதத்தில், இது போன்ற ஜீவராசிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அதிசயம் தான் என, நார்வே-வைச் சேர்ந்த ரோமன் ஃபெடோர்த்சவ் என்ற மீன்பிடிப்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விசித்திர நண்டின் போட்டோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில் எழுதிய ரோமன், “நண்டுகள் எல்லாம் ஒன்று தான். அவற்றில் எதோ ஒன்று நம்மை ஈர்க்கும், சிலவை நம்மை முகம் சுளிக்க வைக்கும். அந்த வகையில், இயற்கைத் தாய் இந்த ஜீவ ராசியின் உருவாக்கத்தில் தனது முழு முயற்சியும் செய்திருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

ஜூலை 5ம் தேதி வெளியிடப்பட்ட இந்த போட்டோவானது, இணையவாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு, தற்போது வைரலாகி வருகிறது. சிலர் ஈதற்கு, கியூட் என்றும், மனிதர்கலை விடவும் சிறப்பான பல்வரிசை கொண்ட நண்டு இது என்றும் கமெண்ட் செய்து வர, ஒரு சிலர்,பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது என்றும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.