இணையத்தில் வைரலாகும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை குறித்த பாடல்கள்...!

இணையத்தில் வைரலாகும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை குறித்த பாடல்கள்...!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை குறித்து பாடப்பட்ட பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆலங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன் என்பவர், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை மற்றும் மஞ்சப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

இதையும் படிக்க: நாளைய ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு...ஏன் தெரியுமா? விளக்கம் இதோ!

அதன் ஒருபகுதியாக இவர் எழுதிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான பாடல்களை மாணவர்களுடன் இணைந்து பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இவர் எழுதிய பாடலுக்கு இரண்டு மாணவர்கள் தாளம் வாசிக்க, அதற்கேற்றார் போல் மாணவி ஒருவர் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.