இப்படி வந்து மாட்டிக்கிட்டியே பங்கு!

இப்படி வந்து மாட்டிக்கிட்டியே பங்கு!

போடி நாயக்கனூர் பகுதியில் எலி கூண்டில் சிக்கிக் கொண்ட நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத்தெருவில் சங்கரன் என்பவர் வீட்டில் கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பு நுழைந்துள்ளது. 15 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்புப் பகுதியில் பாம்பு நுழைந்து விட்டதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் இருந்தனர்.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி சிறைக்கு மாற்றம்...!

இந்நிலையில், அப்பகுதியில் எலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் ஒரு எலி சிக்கியிருப்பதைக் கண்ட அந்த நல்ல பாம்பு, எலியை பிடிக்க கூண்டுக்கு சென்றபோது வசமாக சிக்கிக் கொண்டது. 

கூண்டுக்குள் இருந்து ஆக்ரோஷமாக  படமெடுத்து சீறிய பாம்பைக் கண்டு குடியிருப்பு வாசிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் தகவலறிந்த  தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையினர், 4 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து, போடி மெட்டு மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.