மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமண தம்பதி...நெகிழ்ச்சியில் மக்கள்!

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமண தம்பதி...நெகிழ்ச்சியில் மக்கள்!

கர்நாடகாவில், திருமணம் முடிந்த கையோடு மண கோலத்தில் வாக்களிக்க வந்த தம்பதியால் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் வாக்குகளை மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தி வந்தனர். 

இதையும் படிக்க : அதிமுக ஆட்சியில் தொடங்கிய பணி... திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் பரபரப்பு...!

இந்நிலையில், கோலார் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத், ரூபினி என்ற தம்பதி காலையில் திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடி எண் 240-ல்  தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். 

இருப்பினும், திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் தங்களுடைய கடமையை நிறைவேற்ற வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.