2.5 வயது குழந்தை செய்த சாதனை...!மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு!

2.5 வயது குழந்தை செய்த சாதனை...!மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு!

ராணுவத்திலும், விமானிகளும், பயன்படுத்தக்கூடிய சங்கேத குறியீடு வார்த்தைகளை கூறி, இரண்டரை வயது குழந்தை, சாதனை படைத்துள்ளது. இந்த குழந்தையை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.   


காஞ்சிபுரம் மாநகராட்சி வேதாச்சலம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் சுதாகர் - ஹேமலதா தம்பதியர்.  பொறியாளர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு யஷ்வந்த் என்ற இரண்டரை வயது மகன் உள்ளான். இந்த குழந்தை தனது புத்திக் கூர்மையாலும், பெற்றோரின் பயிற்சியாலும், ராணுவத்திலும், விமானிகளும், பயன்படுத்தக்கூடிய சங்கேத குறியீடு வார்த்தைகளை சரளமாக கூறுகிறது.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Famous-actor-who-came-in-support-of-OPS

அதன்படி, 26 சங்கேத குறியீடு வார்த்தைகளை, 36 நொடிகளில் தவறின்றி சொல்லி அனைவரையும் அசத்தியுள்ளான். சிறுவனின் இந்த சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,  மற்றும் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.  

அதேபோல், 17 நொடிகளில் இந்திய வரைபடத்தில் உள்ள மாநிலங்களின் பெயர்களைக் கூறி அனைவரையும் வியக்க வைத்தார். சிறுவனின் இந்த சாதனையை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆர்தி, சிறுவனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.