பயணிகள் ரயிலில் பயணம் செய்த காளை...! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

ஜார்கண்ட் மாநிலத்தில் காளை ஒன்று பயணிகள் ரயிலில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயணிகள் ரயிலில் பயணம் செய்த காளை...! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

ரயில் பயணம் : 

ரயிலில் பயணம் செய்வது, பலருக்கும் வசதியாகவும், நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவாகவும் இருக்கும், அதனாலேயே பலரும் ரயில் பயணத்தை விரும்புவது உண்டு. மனிதர்கள் ரயிலில் பயணம் செய்து பார்த்திருப்பீர்கள். காளைகள் ரயில் பயணம் செய்து பார்த்திருக்கீறீர்களா..? ஆம் ஜார்கண்ட் மாநிலத்தில் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

பயணிகள் ரயில் : 

ஜார்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ்ச் மற்றும் பீகாரின் ஜமால்பூர் இடையே ஓடும் பயணிகள் ரயிலில், காளை ஒன்று பயணம் செய்திருக்கிறது. இதன் வழியே பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, மிர்சா சௌகி நிலையத்தில், சுமார் 12 நபர்கள் காளையுடன் ரயிலில் ஏறி, அந்த ரயிலில் பயணித்த பயணிகளிடம், இந்த காளையை சாஹிப்பிகஞ்சில் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த பயணிகள் அதனை புரிந்து கொள்வதற்கு முன்பாக அவர்கள் அந்த காளையை ரயில் இருக்கையில் கட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். 

பொது மக்கள் கருத்து : 

இதில் வியப்படையக்கூடிய செய்தி என்னவென்றால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மிர்சா சௌகி நிர்வாக அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் தான் காளை ரயிலில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள், இது சட்டம் ஒழுங்கு குறித்த அலட்சியம் என்றும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற அலட்சியங்கள் நடக்கக்கூடாது என்றும், இதற்கு நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடனும்  இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.