லிப்டில் சிக்கிய சிறுவர்கள்...பதறி அடித்து வந்த பராமரிப்பாளர்கள்...எழும்பூரில் பரபரப்பு!

லிப்டில் சிக்கிய சிறுவர்கள்...பதறி அடித்து வந்த பராமரிப்பாளர்கள்...எழும்பூரில் பரபரப்பு!

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் லிப்டில் 3 சிறுவர்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழாவது ஆசிய ஆடவர் சாம்பியன் டிராபி போட்டி நாளை முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக 17 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா என 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் விளையாட உள்ள நிலையில், பல்வேறு அணிகள் இன்று காலை முதல் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...!

இந்நிலையில் மைதானத்தில் இயங்கும் லிப்ட் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜூனியர் ஹாக்கி அணியில் விளையாடும் மூன்று சிறுவர்கள் சிக்கினர். இரண்டாவது தளத்தில் லிப்ட் வந்தபோது கதவுகள் திறக்கப்படாத நிலையில் கூச்சலிட்ட வீரர்களின் சத்தத்தை கேட்ட பராமரிப்பாளர்கள் லிப்டின் கதவை உடைத்து சிறுவர்களை பத்திரமாக மீட்டனர். 17 கோடி மதிப்பீட்டில் மைதானம் புதுப்பிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், லிப்ட் பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.