மது போதையில், பஞ்ச் டயலாக் பேசி போலீசிடம் வசமாக சிக்கிய இளைஞர்!

கையில் மது பாட்டில் வைத்து போலீசுக்கே சவால் விட்ட இளைஞர் கைது:

மது போதையில், பஞ்ச் டயலாக் பேசி போலீசிடம் வசமாக சிக்கிய இளைஞர்!

கையில் மது பாட்டில் வந்து விட்டால் உலகமே தன் கையில் என்ற எண்ணம் சில மதுபிரியர்களுக்கு. அந்த வகையில், ஒரு 20 வயது இளைஞர், தனது சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று பதிவிட்டு, சிறையில் அடைபட்டுள்ளார். இந்த சம்பவம், பெரும் நகைச்சுவையாக பலராலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அகமதாபாத்தில் கிரைம் பிரான்ச், ஒரு 20 வயது இளைஞரை கைது செய்துள்ளது. ஏன் என்றால், அவர், தனது சோசியல் மீடியா பக்கத்தில், மது பாட்டில்களை கையில் பிடித்துக் கொண்டு, போலீசாருக்கு சவால் விடுக்குமாறு பதிவிட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக பேசாமல், படங்களில் வருவது போல, பஞ்ச் டயலாகாக பேசியிருக்கிறார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி, போலீசாரின் பார்வைக்கும் வந்துள்ளது. இந்த சம்பவம் நகைச்சுவையாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அகமதாபாத்தின் ஜமல்பூர் பகுதியைச் சேர்ந்த சைது எனும் முகமது சையது குரேஷி, க்குற்றப்பிரிவு கண்டறிதல் துறை (DCB) யால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். கையில், பீர் மற்றும் விஸ்கி பாட்டில்களை வைத்துக் கொண்டிருந்த சைது, சினிமாவில் வரும் ஹீரோக்களைப் போல, மாசாக பேசுவதாக எண்ணி, பல பஞ்ச் வசனங்களை போலீசுக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார்.

சமீபத்தில், ஹூச் விவகாரத்தில் பல தொடர் இறப்புகள் ஏற்பட்ட நிலையில், சைது வெளியிட்ட இந்த வீடியோவை, லோக்கல் சேனல்களில் வெளியிட்டதால் தான் இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் மீது, டானிமில்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், DCB தெரிவித்துள்ளது.

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கும் சைது, பலரால் கேளி செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே, கடந்த 2020ம் ஆண்டு, இவர் இசான்பூர் பகுதியில், கோக்ரா காவல் நிலைய அதிகாரிகளால், கார்களை குடி போதையில் எரித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.