வோடபோன் நிறுவனத்தால் அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு?

நஷ்டத்தில் இயங்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தால், அரசுக்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனத்தால் அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு?

தொலை தொடர்பு சேவை வழங்குவதில் நிலவும் தொழில் போட்டி காரணமாக நிறுவனங்கள் லாபத்தை மறந்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்கு கூடுதல் சலுகைகளை வழங்கி வருகின்றன.

இதனால் ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்களை போன்று, வோடபோன் ஐடியா நிறுவனமும் பெரும் கடன் நெருக்கடியால் தத்தளிக்கிறது.

பொதுத்துறை வங்கியில் பெற்ற 23 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப செலுத்த முடியாத நிலையும் காணப்படுகிறது.

இந்த நிலையில் தொடர் கடன் நெருக்கடி காரணமாக இந்த நிறுவனம் வீழ்ந்தால், மத்திய அரசுக்கு ஒன்று புள்ளி 6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிறுவனத்தை மீட்டெடுக்க எந்த நிறுவனங்களும் முன்னுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.