நிலவில் சல்பர், பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்த ரோவர்...!

நிலவில் சல்பர், பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்த ரோவர்...!

நிலவின் தென் துருவத்தில் சல்பர் மற்றும் பிளாஸ்மா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், குழந்தையைப் போல் சந்திரயான் 3 ரோவர் வலம்வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தொடர்ந்து விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நடத்திய ஆய்வில், நிலவின் வெப்பநிலை கண்டறியப்பட்டதோடு அங்கு ஆக்ஸிஜன் இருப்பதும் உறுதியானது.

இதையும் படிக்க : கதீட்ரல் சாலை மேம்பாலத்திற்கு இசையமைப்பாளரின் பெயர்...! 

இந்நிலையில் A.P. X.S என்ற ரோவர் கருவி நடத்திய பரிசோதனையில் சல்பர் மற்றும் பிளாஸ்மா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு, விண்கல் மூலம் சல்பர் உருவானதா அல்லது இயற்கையாகவே அங்கு சல்பர் இருந்ததா என சோதனை நடத்தி வருவதாக வீடியோ வெளியிட்டு இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொடர்ந்து இடர்களை அறிந்து பாதுகாப்பான வழியில் பயணிக்கும் வகையில் நிலவில் வட்டமடித்து ரோவர் உலவும் காட்சிகளையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சுட்டித்தனமாக விளையாடும் குழந்தையை பாசத்துடன் தாய் கவனிப்பதுபோல் லேண்டர் வீடியோ எடுத்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.