2 செயற்கைக்கோள்களை ஏந்திச்சென்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட்.. சிக்னல் கிடைப்பதில் சிக்கல் என தகவல்!!

2 செயற்கைக்கோள்களை ஏந்திச்சென்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட்.. சிக்னல் கிடைப்பதில் சிக்கல் என தகவல்!!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 செயற்கைக்கோள்களை ஏந்திச்சென்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று முதல்முறையாக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இதற்காக நள்ளிரவில் கவுண்ட் டவுன் தொடங்கிய நிலையில், காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எஸ்எஸ்எல்வி டி1 என்ற இந்த ராக்கெட், எடை குறைந்த இஓஎஸ் 02, ஆசாதிசாட் என்ற இரு சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

50 நிமிடங்களைக் கடந்தும் சிக்னல் கிடைக்கவில்லை

இந்த நிலையில் இஓஎஸ் 02, ஆசாதி சாட் செயற்கைக் கோள்களின் சிக்னல் கிடைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு அதிலிருந்து பிரிந்த 13வது நிமிடத்தில் சிக்னல் கிடைத்திருக்க வேண்டும் எனவும், 50 நிமிடங்களைக் கடந்தும் தற்போது வரை சிக்னல் கிடைக்காததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்தொடர்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி

இருப்பினும் நிலையான சுற்றுப்பாதையை அடைவது தொடர்பான இறுதிப்பணி குறித்து பகுப்பாய்வு செய்து வருவதாகவும், மீண்டும் தகவல் தொடர்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள்களில் ஒன்றான ஆசாதி சாட், பள்ளி மாணவிகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.