ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கிளம்பவுள்ள எஸ்எஸ்எல்வி..! முதல் சிறிய அளவுடைய ராக்கெட்டாம்..!

இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி காலை 9.18 மணிக்கு கிளம்புகிறது எஸ்எஸ்எல்வி..!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கிளம்பவுள்ள எஸ்எஸ்எல்வி..! முதல் சிறிய அளவுடைய ராக்கெட்டாம்..!

இரு செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி வகையின் முதல் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 6 மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கியது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதிக எடைகொண்ட இவ்விரு பெரிய ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை அனுப்பும் போது செலவு அதிகமாகிறது. எனவே, அதனை குறைக்க தற்போது மினி, மைக்ரோ, நானோ என 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில், எஸ்எஸ்எல்வி எனப்படும் ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்  ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த புதிய வகை எஸ்எஸ்எல்வி முதல் ராக்கெட், 'இ.ஓ.எஸ்., - 02, ஆசாதிசாட்' ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9:18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 6 மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கியது.