இந்தியாவில் அறிமுகமாகும் ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411..! விலையை கேட்டால் தலையே சுற்றும்..!

ஹிமாலியனுக்கும் ஸ்க்ராம் 411-க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்தியாவில் அறிமுகமாகும் ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411..! விலையை கேட்டால் தலையே சுற்றும்..!

வெகு நாட்களாக காத்திருந்த அந்த ஒரு பைக்... ஆண்களின் கனவு பைக்... சமீபத்தில் அனைவரும் அடிக்ட் ஆன பைக்.. இப்போது இந்தியாவிலும் வந்து விட்டது.. அதே தான்.. புதிய ராயல் என்பீல்டு பைக்கின் ஸ்க்ராம் 411... இன்றைய வேகமான உலகில் நாமும் வேகமாக செல்ல இருசக்கர வாகனங்கள் மிகவும் பேருதவியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் ஒருவரது வீட்டில் பைக் உள்ளது என்றால் அவர்கள் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களவோ அல்லது பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவோ இருப்பர். ஆனால் இன்று இருசக்கர வாகனம் இல்லாத வீடே இருக்காது. சாலையில் இறங்கி சென்றால் சாலை முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொள்கின்றன இந்த இருசக்கர வாகனங்கள். அதிலும் இன்றைய காலகட்டத்தில் அனைத்து இளைஞர்களையும் கவர்ந்த ஒரு பைக் என்றால் அது ராயல் என்பீல்டு தான். அதில் உட்கார்ந்தால் வரும் கம்பீரமும், டுபு டுபு என வரும் சத்தமும், சாலையில் செல்லும் போது வரும் ஒரு கெத்தும் வெற லெவலில் இருக்கும்... இளைஞர்களை தாண்டி காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என பல உயர்ந்த துறைகளில் இருப்பவர்களை இந்த பைக் கவர்ந்திருக்கிறது. 

நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் அல்லது சாகச பயணம் மேற்கொள்பவர்களின் முதல் சாய்ஸ்-ஆக உள்ளது இந்த ராயல் என்பீல்டு பைக்குகள். இன்று சந்தையில் இருக்கும் ரகங்களை பார்த்தோமேயானால், கிளாசிக் 350, மெட்டோர், இண்டர்செப்டார், காண்டினெண்டல் ஜிடி, ஹிமாலயன், புல்லட் ஆகிய ரகங்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளது. ராயல் என்பீல்டு வந்த புதியில் தண்டர்பேர்டு ரகமும், புல்லட்டும் அதிக அளவில் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டது என்றே கூறலாம். இன்றும் நாம் சாலையில் செல்லும் போது சுற்றிப் பார்த்தேலே 4-கில் இரண்டு பேர் நிச்சயம் இந்த வகை பைக்குகளை தான் வைத்திருப்பர். ராயல் என்பீல்டு பிரியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக இந்தியாவில் அறிமுகமாகிறது ஸ்க்ராம் 411 வகை பைக். கடந்த 15ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வகை பைக், நிச்சயம் நீண்ட தூரம் பிரயாணம் செய்ய விரும்புபவர்களை கவரும் என கூறப்படுகிறது. 

இந்திய சாலைகளுக்கு ஏற்ற நீண்ட நாள் சோதனைக்குப் பிறகு தற்போது விற்பனைக்கு வந்துள்ள ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411-இன் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.. இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக், ஹிமாலயன் பைக் எஞ்சின் மற்றும் பிளாட்ஃபார்ம் அடிப்படையில், ஒற்றுமை பெற்றிருக்கிறது. அதே சமயம் ஏடிவியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக்கில் 19 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஹிமாலயன் பைக்கில் முன்பக்கம் 21 இன்ச் வீலும், பின்பக்கம் 19 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டிருக்கும். ராய்ல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை நிர்வாகிப்பதை எளிமையாக்கவும், இந்திய சாலைக்கு ஏற்றதாகவும் இருக்கவே வீல் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்க்ராம் 411 பைக் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அடிப்படையிலானது என்பதால், டேங்க், சைட் பேனல்கள் மற்றும் ஃபெண்டர்கள் உட்பட பல விஷயங்கள் கிட்டதட்ட ஒத்துப்போகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை குறைவான வெர்ஷன் என்பதால், ஸ்க்ராம் 411 பைக்கில் இரண்டாம் நிலை ஃபெண்டர், உயரமான விண்ட்ஸ்கிரீன் அல்லது ரேப்பரவுண்ட் ஃப்ரேம் ஆகியவை இடம் பெறவில்லை. மேலும் பிளவுபட்ட இருக்கைகளுக்குப் பதிலாக ஒற்றை-துண்டு இருக்கை இடம் பெற்றுள்ளது. பின்பக்க லக்கேஜ் ரேக் அகற்றப்பட்டு, பின்பக்கத்திற்கான  விளக்குகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன. இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் தோற்றத்தோடு ஒத்து இருக்க கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனைப் போலவே, ஸ்க்ராம் 411 ஆனது 411சிசி சிங்கிள் சிலிண்டர் எல்எஸ்410 ஆயில்-கூல்டு எஞ்சின் மூலம் 24 பிஎஸ் ஆற்றலையும் 32 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஹிமாலயனுக்கு இணையான அளவு பொருட்களை தூக்கிச் செல்லும் திறனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுடன் ஒப்பிடும் போது, ​​புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பல அம்சங்களைத் தவிர்த்துள்ளதால், சற்று மலிவு விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப விலை சுமார் ரூ.2.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி அடுத்து வரும் ஜெனரேஷனை இந்த வகை பைக்குகள் நிச்சயம் கவரும் என்கின்றனர் ராயல் என்பீல்டு நிறுவனத்தினர்...