ட்விட்டரில் புகைப்படம், வீடியோக்களை அனுமதியின்றி ஷேர் செய்ய முடியாது..!

புதிய சி.இ.ஓ நியமித்த அடுத்த நாளே வெளியான புதிய விதிமுறை..!

ட்விட்டரில் புகைப்படம், வீடியோக்களை அனுமதியின்றி ஷேர் செய்ய முடியாது..!

ட்விட்டரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.  ட்விட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில், ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்ட அடுத்த நாளே புதிய விதிமுறையை ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ட்விட்டரில் தனி நபர்களின் புகைப்படம், வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பகிர தடை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்களை அச்சுறுத்தும் விதமாக பெண்கள் மற்றும் சமூகத்திற்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் தவறான வதந்திகளை தடுக்க இந்த புதிய விதிமுறை உதவும் என நம்பப்படுகிறது.