புயலால் நாசாவுக்கு வந்த சோதனை..3-வது முறை ஒத்திவைப்பு..எப்போ தான் மனுசன் நிலாவுக்கு போறது?

அக்டோபர் மாதம் மீண்டும் ஆர்டெமிஸை ஏவ திட்டம்..!

புயலால் நாசாவுக்கு வந்த சோதனை..3-வது முறை ஒத்திவைப்பு..எப்போ தான் மனுசன் நிலாவுக்கு போறது?

ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கிய நாசா:

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969-ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சில் ஈடுபட்டு வரும் நாசா, தற்போது மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியுள்ளது. 

ஓரியனை சுமந்து செல்லும் ஆர்டெமிஸ்:

அதன்படி, 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, இத்திட்டத்தின் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் - 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, 'ஓரியன்' விண்கலத்தை சுமந்து செல்கிறது.

2 முறை ஒத்திவைப்பு:

புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் - 1 ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு முறை ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் ஒத்திவைப்பு:

இதையடுத்து, ராக்கெட் மீண்டும் வரும் 27 ஆம் தேதி ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த ராக்கெட்டை மீண்டும் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.