மருத்துவத்துடன் இணையும் தொழில்நுட்பம்!!! புதுமையில் இறங்கிய மும்பை மாநகராட்சி!!!

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆனது ‘ப்ளூடூத்’ உடன் கூடிய ஸ்டெதெஸ்கோப்களை மும்பையின் இரண்டு பெரும் மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
மருத்துவத்துடன் இணையும் தொழில்நுட்பம்!!! புதுமையில் இறங்கிய மும்பை மாநகராட்சி!!!
Published on
Updated on
2 min read

தொழில்நுட்பம் என்பது நாம் காணும் மிகப்பெரிய சாதனங்கள் மட்டுமல்ல. அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த தொழில்நுட்பம், பல மடங்கு தற்போதைய காலத்தில் வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியால் பல வகையான மேம்பாடுகள் வந்து, மற்ற துறைகளும் அவற்றால் பயனடைகின்றனர். அவ்வகையில், தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவ துறைக்கு மிகப்பெரிய துணையாகவே இருந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

மார்பில் சளி சேர்வது முதல், இதயத் துடிப்பு வரை, சாதாரண மனிதரின் காதுகளுக்கு கேட்காத நுணுக்கமான சத்தங்கள் கேட்க உருவான கருவி தான் ஸ்டெதெஸ்கோப். அந்த கருவியில் தற்போது மேலும் ஒரு பெரிய மேம்பாடு வந்துள்ளது.

ஆயுசின்க் (AyuSynk) என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் ஸ்டெதெஸ்கோப், ‘ப்ளூடூத்’ உடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயு டிவைசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த டிஜிட்டல் ஸ்டெதெஸ்கோப் மூலம், மார்பு ஒலிகளை மேலும், நுணுக்கமாகக் கேட்டு, அதன் மாற்றங்களைக் கண்டறிய முடியும். நோயாளிகளின் உடல்நலம் குறித்த பதிவாக, இந்த கருவி, ஒலிகளை சேமித்து அதனை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த சாதனம் அனுமதிக்கிறது. 

இந்த ப்ளூடூத் ஸ்டெதெஸ்கோப் குறித்து ஒரு பெரும்பான்மையான பொது மக்கள் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நீலம் அண்ட்ராடே, “இந்த ஸ்டெதெஸ்கோப், நோயாளிகளின் உடல் பாகங்களில் வைத்து அவர்களது உடல்நலத்தை கண்காணிக்கவும், அவர்களின் புளூடூத் ஹெட்ஃபோன்கள் மூலம், அவர்களே அதைக் கேட்கவும் உதவுகிறது. தொற்று நோய்களின் போது பாதுகாப்பான தூரத்தை மருத்துவர்கள் பராமரிக்கவும் இது உதவும்” என கூறியுள்ளார். 

மேலும், ஒருவர் நோயாளிகளின் தரவுகள் குறித்து கைப்பட எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், அதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் சேமிக்கும் விதமாக இந்த ஸ்டெதெஸ்கோப் இருக்கிறது எனவும் கூறிய அவர், தற்போதைய மொபைல் பயன்பாட்டின் மூலம் ஒவ்வொரு நோயாளியின் தரவையும் தானாகவே பதிவுசெய்து சேமிக்கும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்டெதெஸ்கோப்பை முதன்முறையாக, மகாராஷ்டிராவின் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஆயு டிவைசஸ்-இன் உதவியுடன் 'ப்ளூடூத் இயக்கப்பட்ட' ஸ்டெதாஸ்கோப்களை சியோன் மற்றும் பிஒய்எல் (BYL) நாயர் ஆகிய இரண்டு பெரிய மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com